#BREAKING: சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது..?
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்ய உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் -புகழேந்தி அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மீது புகார்கள் வந்துள்ளது. அந்த துணைவேந்தர் மீது இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த துணைவேந்தரின் மீது பெறப்பட்ட புகாரின் அடைப்படையில் ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு ஏன் நாங்கள் தடை விதிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினார்.
மேலும், சூரப்பா மீது புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்ததன் அரசாணை மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது என கூறப்படுகிறது. அந்த புகார்கள் என்னென்ன அந்த புகாரில் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் எனவே அந்த புகார்களின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.