பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறான கருத்து பகிர்ந்த நடிகர்எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து அவதூறான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்,கடந்த 2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,நடிகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,”கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி மற்றும் தேசப்பற்று தொடர்பாகத் தனது கட்சிக்காரருக்கு மெசேஜ் அனுப்புபவர் என்பதால்,அந்த செய்தியாக இருக்கும் என்று நினைத்து அவர் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ல் எழுதியதை ஃபார்வர்ட் மட்டுமே செய்ததாகவும், பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு எனத் தெரியவந்ததால், உடனடியாக ஏப்ரல் 20ஆம் தேதியே நீக்கிவிட்டதுடன், உடனடியாகத் தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியிருந்தார்”,என்று தெரிவித்தார்.இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில்,நடிகர் எஸ்.வி சேகர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறான கருத்தை பகிர்ந்த எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்,பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறான பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்,மேலும்,அவதூறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்டல் சரியாகி விடுமா? என்று நீதிபதி நிஷா பானு அவர்கள் கேள்வி எழுப்பி,வழக்கை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டு,ஒருவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…