சென்னை:ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் லஞ்சம்,ஊழல் நடந்ததால் தி.நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான்காவது நாளாக இன்று முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.அந்த வகையில், சென்னை,எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல்வர்நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு, மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி வாயிலாக நேரடியாக கேட்டறிந்தார்.
இதனையடுத்து,தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள கால்வாயில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கழிவுகளை அகற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில்,ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் லஞ்சம்,ஊழல் நடந்ததால் தி.நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,இது தொடர்பாக செய்தியாளரிட அவர் கூறியதாவது:
“ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் லஞ்சம்,ஊழல் நடந்ததால் தி.நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அரைகுறையாக நடந்த பணிகளால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக,10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது”,என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர்,”எந்த நோக்கத்துடனும், லட்சியத்துடனும் ஆட்சிக்கு வந்தோமோ,அதன் அடிப்படையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.நான் மேயராக இருந்தபோதும்,துணை முதல்வராக இருந்தபோதும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டது போன்று தற்போது முதல்வராக நிவாரணப்பணிகளை செய்து வருகிறேன்.
சென்னையில்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.அதே சமயம்,மழைக்கால நோய்களை தடுக்க ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மேலும்,இரண்டு நாட்கள் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே,அவை முடிந்த பிறகே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பது பற்றி முடிவு எடுக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…