#Breaking:மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது? – நிதியமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
இதனையடுத்து,தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தார்.இதனைத் தொடர்ந்து,நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும்,மகளிருக்கு ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று அதிமுக,பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனிடையே,மகளிருக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இதனையடுத்து,இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என மகளிர் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த சூழலில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது,2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இன்னிலையில்,மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிமைச்சர் கூறியதாவது:
“மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் சரியான பயணிகளை சென்றடைய,திட்டத்தை வகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும்,மாநில நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.