டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது.
இந்த நிலையில்,டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில்,2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2,குரூப் 2 A தேர்வுகள் நடத்தப்படாத நிலையில்,குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சத்திப்பில் பேசிய பாலச்சந்திரன் அவர்கள்,”குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை 2022 பிப்ரவரியில் வெளியிடப்படும்,அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு நடைபெறும்”,என்று கூறினார்.மேலும்,குரூப் 2 பிரிவில் 5831 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், குரூப் 4 பிரிவில் 5255 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக,அடுத்த ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய அவர்,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்தாளில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம்; கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் அதுவும் கணக்கிடப்படும்.தேர்வருக்கு சம்பந்தம் இன்றி தேர்வு மையம் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.ஓ.எம்.ஆர். தாளில் கருப்பு மையில்தான் எழுத வேண்டும்.டிஎன்பிஎஸ்சி தேர்வு தாள்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ்மூலம் கண்காணிக்கப்படும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…