#Breaking:”ஜெ.வுக்கு என்ன சிகிச்சை;எனக்கு தெரியாது” – ஓபிஎஸ் வாக்குமூலம்!

Default Image

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர்:

sasikala,ilavarasi

அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது.

இளவரசி அளித்த வாக்குமூலம்:

இந்நிலையில்,”அப்பல்லோ மருத்துவமனையில்,ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது மன உளைச்சலுடன் இருந்தார்.2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவரது உடல்நலக்குறைவுடன் இருந்தார் எனவும் இளவரசி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்:

ops

இதனிடையே,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார்.அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகினார்.

ஓபிஎஸ் அவர்களுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு,பல்வேறு காரணங்களால் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.தற்போது அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

எனக்கு தெரியாது:

இந்நிலையில்,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்று ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

மேலும்,2016 ஆம் ஆண்டு செப்.22 ஆம் தேதி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது,அந்த சமயத்தில் தான் சொந்த ஊரில் இருந்ததாகவும்,உதவியாளரின் மூலம்தான் இந்த தகவல் கிடைத்ததாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம்:

ops

அதன்பின்னரே,அடுத்த நாள் சென்னை வந்து மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த தலைமைச்செயலாளரிடம் விவரங்களை கேட்டதாகவும், மேலும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையம் ஏன்?:

ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற முறையில் ஆணையத்தின் கோப்பில் தான் கையெழுத்திட்டதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணைக்கு பின்னரே முழு தகவல் தெரிய வரும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Lucknow Super Giants won
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi