ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி 27 ஆண்டுகளாக எனது மகன் ரவிசந்திரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 3 மாத சாதாரண விடுப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளேன். அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க பரிசீலனை செய்ய இயலாது என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, ரவிச்சந்திரனுக்கு 2 மாதகால சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…