#BREAKING: சசிகலாவின் நிலைப்பாடு என்ன? அதிமுகவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் டிடிவி.!
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை டிடிவி தினகரன் கைவிட்ட சூழலில், சசிகலாவின் நிலைப்பாடு என்ன? என்று நீதிமன்றம் கேள்வி.
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா, தினகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுகவிற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை டிடிவி தினகரன் வாபஸ் பெறுவதாகவும், அமமுக என்ற கட்சி தொடங்கி விட்டதால் வழக்கில் இருந்து விலகி கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை டிடிவி தினகரன் கைவிட்ட சூழலில், சசிகலாவின் நிலைப்பாடு என்ன? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக விவகாரத்தில் சசிகலா தனது நிலைப்பாட்டை ஏப்ரல் 9ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை அன்றைக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதா? அல்லது தொடர்ந்து நடத்துவதா என்பது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. சசிகலா, தினகரன் வழக்குகளை நிராகரிக்க கோரிய ஓபிஎஸ், இபிஎஸ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தனர் என்பது குறிப்பித்தக்கது.