#BREAKING: வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு

Default Image

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் முதன்முதலாக, வணிக வழக்குகளை விசாரிக்கும் தனி வணிக நீதிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஜெயரஞ்சன் எழுதிய Dravidian journey புத்தகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சேமநல நிதி உயர்வை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா தோற்றால் உயிரிழந்த 480 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.20 கோடி தொகையினை மாநில அரசு விரைவில் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்