அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என ஈபிஎஸ் தரப்பு உத்தரவாதம் என சிவி சண்முகம் பேட்டி.
ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு கூறுகையில், அதிமுகவின் அனைத்து பதவிகளையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், ஆனால் அது தவறப்பட்டுள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டது. இதன்பின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இபிஎஸ் அவசரப்படுவது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இதன்பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தமாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு மீதான இறுதி விசாரணை நவம்பர் 21-ல் நடக்கிறது. தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என கூறி, உச்சநீதிமன்றம் ஈபிஎஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டது என தெரிவித்தார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…