#Breaking : தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரத்தை திரட்ட வேண்டும்…! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…!
- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை தமிழக அரசு திரட்ட வேண்டும்.
- மாவட்ட வாரியாக விவரங்களை திரட்டி, 24 மணி நேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள், பெற்றோரை இழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும், அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை வட்டியுடன் அந்த குழந்தைக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை தமிழக அரசு திரட்ட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக விவரங்களை திரட்டி, 24 மணி நேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் கொடுக்குமாறு,தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.