#BREAKING: பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!
பேருந்து பரிசோதனையில் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை என எச்சரிக்கை.
பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தவும், முன் இருக்கையில் அமர்ந்து தூங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது, உறங்குவதாக பயணிகள் புகாரை தொடர்ந்து போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும், பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளையும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் செல்போனியில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பேருந்து பரிசோதனையில் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு நேர நீண்ட தூர வழித்தடங்களில் ஓட்டுனர்களுக்கு உறுதுணையாக நடத்துனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.