#BREAKING : வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது .
தற்போது வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.3,039 தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக வாக்குகள் எண்ணும் மையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.