#BREAKING : 4 மணி நேரமாகியும் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை
- ஊரக உள்ளாட்சிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
- கரூர் மாவட்டத்தில் தோகைமலை ஒன்றியப்பகுதியில் இதுவரை வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.
ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஒரு சில இடங்களில் உணவு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருந்து வருகிறது.ஆனால் கரூர் மாவட்டத்தில் தோகைமலை ஒன்றியப்பகுதியில் இதுவரை வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.4 மணி நேரத்திற்கு மேலாகியும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.வாக்கு பெட்டிகளில் இருந்து வாக்கு சீட்டுகளை பிரிக்காததே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.