#breaking: விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தி வைப்பு.!

விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை ஒன்றரை மணிநேரமாக நிறுத்திவைப்பு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சில சுற்றுகளை கடந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர் விஜய பாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது.
முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால், அந்த இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அணுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் முகவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், விராலிமலை தொகுதியில் ஒன்றரை மணிநேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள், முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் சுமார் ஒருமணிநேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது சுற்றில் ஒன்றரை மணிநேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. விராலிமலை தொகுதியில் இன்னும் 20க்கும் அதிகமான சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. இருப்பினும், தற்போதைய வாக்கு நிலவரப்படி, அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025