#BREAKING: விருதுநகர் வன்கொடுமை – 3வது நாளாக சிபிசிஐடி விசாரணை!
விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3வது நாள் சிபிசிஐடி விசாரணை.
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி போலீசார் 3வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். வன்கொடுமை நடந்த மருந்து குடோனுக்கு அழைத்து சென்று ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த விசாரணையில், போதை மாத்திரை, போதை ஊசிகளை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. முன்னதாக விருதுநகரில் 22 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மைதிய சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.