#Breaking:விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு – 400 பக்க குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யும் சிபிசிஐடி!
விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமத்,மாடசாமி,பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர்.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில்,கடந்த 8-ஆம் தேதி சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் அவர்கள் நான்கு சிறார்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து,விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர் பரிணரிந்துரையின் பேரில், ஹரிஹரன், ஜுனைத் அகமத்,மாடசாமி, பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,நான்கு பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் மீது 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செயய்யவுள்ள்ளனர்.