#BREAKING: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு.
சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு கோரி கூட்டணி கட்சிகள், முதன்மை கட்சியான திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 18, 45, 72, 107, 135, 190 ஆகிய 6 வார்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.