#BREAKING: இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை, 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை மையல் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல் உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.9, 10-ல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 6, 2022