#BREAKING: வேலுமணி வழக்கு – அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு!
உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என தமிழக அரசு தகவல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுமணி தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளதால் உயர் நீதிமன்றம் விசாரிப்பது சரியாக இருக்காது என வாதம் வைக்கப்பட்டது.தன் மீதியான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்குகள் செப்.19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்குகளை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.