#BREAKING: அரிவாளால் வெட்டப்பட்ட விஏஓ உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அரிவாளால் வெட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் (வயது 55) அரசு ஊழியரை மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் விஏஓ லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த விஏஓ பிரான்சிஸ் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஏஓவை அரிவாளால் வெட்டியதில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் கைதான நிலையில், மற்றவர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.