#Breaking: திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை

Default Image

திமுக தொடர்ந்த  அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.வைகோ தற்போது  மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இதனைத்தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி விசாரணைக்கு  உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வைகோவால் ஆஜராக இயலவில்லை .இதனால் தீர்ப்பை  நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் இன்று  விசாரணைக்கு வந்தது.உடல்நலக்குறைவு காரணமாக வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி வைகோவை விடுதலை செய்தது சிறப்பு நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்