மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியமான கட்சி மதிமுக ஆகும்.மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.
இன்று மதிமுகவின் உயர்நிலைக்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதில் மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை அடுத்து வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் , இருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வைகோ.நேற்று திமுக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…
ஜம்மு : ஜம்மு & காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீண்டும்…
சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும்…