ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள், கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை திறந்து வைத்துள்ளார்.
ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள், கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை திறந்து வைத்துள்ளார். அதன்பின், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து பரிசோதனைகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கருப்பு பூஞ்சை எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, கருப்பு பூஞ்சை குறித்து ஆராய 13 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 4.20 லட்சம் தடுப்பூசிகள் இன்று வருவதால், நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். மாலை சென்னைக்கு வரவுள்ள தடுப்பூசிகளை உடனே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…