#Breaking: மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையத்தை அகற்றவேண்டும் – உயர்நீதிமன்றம்
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை மருத்துவமனைகளில் இருந்து அகற்றி வேறு இடங்களில் அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்துபவர்கள் மருத்துவமனைக்கு வர அஞ்சுகிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்தும் மையங்களை வேறு இடங்களில் அமைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்று, மாற்று திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த கோரி பிஎம் கேர்-க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பிஎம் கேர்-க்கு மாநில அரசு விண்ணப்பித்தால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் எனவும் மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.