2022-23- ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில்,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இனி உழவர் சந்தைகள் மாலையிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.அந்த வகையில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை மாலையில் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக,உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில்,மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்படவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில்,உழவர் சந்தைகள் இனி மாலையிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும்,புதிய உழவர் சந்தைகள் அமைக்க ரூ.10 கோடி நிதியும்,ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 50 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…