#Breaking:கொரோனா தடுப்பு விதிகளின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் உறுதி!

Published by
Edison

சென்னை:கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது,கொரோனா தொற்று உச்சத்தில் இருப்பதாலும்,தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை ஜன.21 ஆம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையுடன் தேர்தல் நடத்த கடந்த ஆண்டு டிசம்பரில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என்றும்,முன்னதாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,தேர்தலை ஒத்திவைக்க கோரி நக்கீரன் அல்லாமல் பிற தரப்பினரும் மனுதாக்கல் செய்துள்ளதால்,வருகின்ற திங்கட்கிழமை இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Recent Posts

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…

4 hours ago
அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…

5 hours ago
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

7 hours ago
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

7 hours ago
MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

9 hours ago