வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறந்து தான் உள்ளது. அங்கு மக்கள் வந்து தான் செல்கின்றனர். எனவே கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 முதல் 6 வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 3-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் தீவிரமாக இருப்பதால், பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது உகந்ததாக இருக்காது என தெரிவித்தனர்.
அதற்க்கு பதிலளித்த நீதிபதி, வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறந்து தான் உள்ளது. அங்கு மக்கள் வந்து தான் செல்கின்றனர். எனவே கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும், இதனை நடத்துவதற்கு ஏன் மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, தேர்தல் அட்டவணையும் தயார் நிலையில் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதிகள், அரசு தரப்பில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கம்போல் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக பிற்பகலில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகிறது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…