#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையர் ஆலோசனை!

Published by
Castro Murugan

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது, கொரோனா தடுப்பு நடவடிக்கை, பறக்கும் படையினரின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணி குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாளையும் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகளை திட்டமிட்டபடி விரைந்து நடத்த தேர்தல் ஆணையம் ஆயுதம் ஆகி வருகிறது.

Recent Posts

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

8 minutes ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

1 hour ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

2 hours ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

2 hours ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

3 hours ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

3 hours ago