#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையர் ஆலோசனை!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது, கொரோனா தடுப்பு நடவடிக்கை, பறக்கும் படையினரின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணி குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாளையும் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகளை திட்டமிட்டபடி விரைந்து நடத்த தேர்தல் ஆணையம் ஆயுதம் ஆகி வருகிறது.