#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி? – அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Published by
Edison

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான மாநில தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு  தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியனது.

மேலும்,கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணை நாளை மறுநாள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  மாநில தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி,அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில்,திமுக,அதிமுக,பாஜக, காங்கிரஸ்,தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சற்று முன்னதாக 11.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த  கூட்டத்தில்,தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,400 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறதாக கூறப்படுகிறது.மேலும்,ஆலோசனை கூட்டத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா?,அல்லது இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்துவதா? என்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கேட்டறியவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ”ஷைன் டாம் சாக்கோ” கைது.!

குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ”ஷைன் டாம் சாக்கோ” கைது.!

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…

4 minutes ago

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

2 hours ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

2 hours ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

2 hours ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

3 hours ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

3 hours ago