#BREAKING: உ.பி வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது – முதல்வர் மு.க ஸ்டாலின்!

போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உ.பி மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.
மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். உத்தர பிரதேசத்தில் கொந்தளிப்புக்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வ்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வரும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.