#Breaking:ஆளுநர் மாளிகை சென்றடைந்த துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா!

Default Image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.அதன்பின்னர் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக,பாஜக வெளிநடப்பு செய்தது.

இதனைத்தொடர்ந்து,பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில்,வாக்கெடுப்பு மூலம் தமிழக அரசு கொண்டு வந்த இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இதன்மூலம்,தெலங்கானா,கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்து வருவதைப்போன்று,இனி தமிழகத்திலும் அதே முறை பின்பற்றப்படவுள்ளது.

இதனையடுத்து,தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட 2022 தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா நேற்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்.கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா ஆளுநர் மாளிகையை சென்றடைந்தது.ஏற்கனவே,நீட் விலக்கு,மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் உள்ள நிலையில்,துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா ஆளுநர் மாளிகையை சென்றடைந்துள்ளது.இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son