#BREAKING: உடுமலை சங்கர் கொலை – மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு.!

கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில், சங்கா் உயிாிழந்தாா். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுதலை செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்” பிரசாந்த் கிஷோர் பேச்சு!
February 26, 2025
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025