#Breaking:சென்னையில் 2 நிதி நிறுவனங்கள் ரூ.300 கோடியை மறைத்தது அம்பலம் – வருமான வரித்துறை தகவல்..!

சென்னையை சேர்ந்த இரு நிறுவனங்கள் ரூ.300 கோடியை மறைத்தது அம்பலமாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த இரண்டு நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,இந்த இரண்டு நிறுவனங்களும் தொழிலதிபர்கள்,பெரு நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
மேலும்,சென்னையில் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடியை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025