#BREAKING: 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும்- வானிலை மையம்.!
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால், மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லவேண்டாம் என தெரிவித்தார்.
அடுத்துவரும் 2 தினங்களுக்கு மழை தொடரும், சில பகுதிகளில் கனமழையாக இருக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Deep Depression weakened into a Depression over Gulf of Mannar. The Depression is likely to remain practically stationary over the same region and weaken into a Well marked Low Pressure Area during next 12 hours. https://t.co/QSfsJn8fMK pic.twitter.com/OPiYrpC4UO
— India Meteorological Department (@Indiametdept) December 4, 2020