#Breaking : தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றம் …..!
அந்தமானில் நேற்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் தற்பொழுது அந்தமான் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் 24 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா- ஒடிஷா அருகே 4 ஆம் தேதி வரும் என இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.