#BREAKING : வாகன சோதனையின் போது வேன் மோதி போக்குவரத்து அதிகாரி மரணம்..!
வாகன சோதனையின் போது வேன் மோதி போக்குவரத்து அதிகாரி மரணம்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணியாற்றி வருகிறார். அவர் இன்று காலை ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த வேன் நிற்காமல், அவர் மீது மோதி விட்டு உடனடியாக சென்று விதத்தில். இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில், உயரதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.