#BREAKING: டார்ச் லைட் சின்னம் .. மக்கள் நீதி மய்யம் ரிட் மனு தாக்கல்..!
மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பேட்டரி டார்ச்” சின்னத்தை தமக்கு ஒதுக்கும்படியும், எம்ஜிஆர் மக்கள் கட்சி “பேட்டரி டார்ச்” சின்னத்தை பயன்படுத்துவதைத் தடுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டிய மக்கள் நீதி மய்யம் அந்த ரிட் மனுவில் விண்ணப்பித்துள்ளது.
தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) உத்தரவு, 1968-ன் படி வெளிவரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான சின்னமாக “பேட்டரி டார்ச்” சின்னத்தை உபயோகிப்பதற்கான உரிமையை மக்கள் நீதி மய்யம் கோரியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது கட்சி , சென்னை உயர்நீதி மன்றத்தில்
ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.#எதுவும்_தடையல்ல#சீரமைப்போம்_தமிழகத்தை #தலைநிமிரட்டும்தமிழகம் pic.twitter.com/v906lle5YO— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 18, 2020