#Breaking:இன்றைய தங்கம் விலை உயர்வு – ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன்!
சென்னை:இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.39,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக பெண்கள் தங்களது அழகுக்கு மேலும் அழகு சேர்க்க தங்க நகைகளை பயன்படுத்துவதாலும்,அவற்றில் முதலீடு செய்வதாலும் தங்கத்தின் விலையை நாளுக்கு நாள் கவனித்து வருகின்றனர்.ஏனெனில் தங்கம் விலை ஏற்ற,இறக்கத்துடனே காணப்படுகிறது.
இந்நிலையில்,சென்னையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.39,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.இதனால்,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,956-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் அதிகரித்து,கிராம் ரூ.72.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.