அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறை தேடி வருகிறது.
இதனையடுத்து,பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை நேற்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில்,அவர் மீது மேலும் ஒரு பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.சாத்துரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் எஸ்.பிக்கு வந்த இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில்,உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தங்கள் தரப்பை கேட்காமல் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…