மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்-ஐ’ அமைக்கிறது என முதலமைச்சர் அறிவிப்பு
மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.
மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து 5 ஏக்கரில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என கூறிய முதலமைச்சர், மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். ‘டைடல் பார்க்’ மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் தொழிநுட்பத்தின் முக்கிய மையமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…