பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.
இந்நிலையில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும், வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என திமுக அறிவித்தது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இரு பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுக்கள் செய்த நிலையில், துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…