தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 964 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இன்று 413 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 11,377 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,03,399 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 10,138 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று பாதிக்கப்பட்ட 1,162 பேரில் 50 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…