ரூ.2000 இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கொரோனா நிவாரண தொகையான 4,000 ரூபாயில் முதல் தவணை ரூ.2000 இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைத்து பரவலை உடனடியாக தடுக்கும் பொருட்டு 07.06.2021 முடிய அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.
இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழலை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் அரிசி குடும்ப அட்டைகள் பெற தகுதியுடையவை என தணிக்கை மூலம் தீர்மானிக்கப்பட்டு குடும்ப அட்டைகள் விநியோகிக்க நடைமுறையில் இருந்த குடும்பங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 2,09,81,900 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 15.05.2021 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.2000/- வீதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
31.05.2021 முடிய இவற்றில் 98.4 சதவீதம் குடும்பங்கள் நிவாரண உதவித் தொகை பெற்று சென்றுள்ளனர். மீதமுள்ள குடும்பங்களில் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற காரணத்தினாலும் முகவரி மாற்றம் செய்து போக்குவரத்து வசதியின்மை காரணமாக நியாயவிலைக் கடைக்கு செல்ல இயலாத நிலையிலும் சில குடும்பங்கள் நிவாரண உதவித் தொகைபெற இயலவில்லை என அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் அவர்களுக்கான நிவாரண உதவித் தொகை பெறும் வகையில் அத்தொகையினை ஜூன் 2021 மாததில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. அட்டைதாரர்கள் உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் சமுக இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்தொற்று அபாயத்தில் இருந்து காத்துக்கொள்ளவும் நோய் தொற்று சங்கிலியை உடைத்து விடவும் உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…