#Breaking:தூத்துக்குடி துப்பாக்கி சூடு;நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு…!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இதற்கான,கால அவகாசம் வருகின்ற 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில்,அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு ,அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக,இந்த ஆணையம் இடைக்கால அறிக்கையை மே மாதம் 14 ஆம் தேதி முதல்வரிடம் சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.