#BREAKING: தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிசூட்டை விரும்பவில்லை – தமிழக அரசு

Default Image

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே என தலைமை நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, மக்கள் பெரும்பாலானோர்  எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா நிறுவனத்தின் ஆலையை திறப்பதற்கு பதிலாக நாடு முழுவதிலும் உள்ள மற்ற ஆலைகளில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மத்திய அரசு கவனம் செலுத்தலாம் என்றும் ஆலையத் திறப்பது சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே என தலைமை நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார். ஆலையை நாங்கள் ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடி பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது என தமிழக அரசு பதிலளித்துள்ளது.  ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்கக்கூடாது என்று தமிழகம் கூறுவது சரியா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆலையை திறக்க முடியாது என சொல்லக்கூடாது என கூறி, எந்த நிறுவனம் என்பது முக்கியமில்ல, மக்களின் உயிர் தான் முக்கியம் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று மற்றொரு அசம்பாவித சம்பவம் நடைபெறுவதை விரும்பவில்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.

ஆகையால், தமிழக அரசை விளக்கமளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் 26ம் தேதி ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்