#Breaking:”வலிமை சிமெண்ட் விலை இதுதான்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தமிழகம்:இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள வலிமை சிமெண்ட் கீழ்க்கண்ட இரண்டு விலைகளில் கிடைக்கும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்திருந்தார்
இதனையடுத்து,தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வலிமை‘ சிமெண்டை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அறிமுகம் செய்து,வலிமை சிமெண்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில்,வலிமை சிமெண்ட் ரூ.350 மற்றும் ரு.365 விலைகளில் கிடைக்கும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:
“தமிழக அரசின் மலிவு விலை வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது.வலிமை சிமெண்ட் ஆனது தரத்தின் அடிப்படையில் ரூ.350 மற்றும் ரூ.365 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு,சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.