#Breaking:அது தேர் திருவிழாவும் அல்ல,அவை தேரும் அல்ல – அமைச்சர் சேகர் முக்கிய பாபு!

Default Image

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில்  உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,முதல்வர்,பிரதமர் மற்றும் அதிமுக சார்பில் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே,தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.அப்போது,திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதன்பின்னர்,உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதாது என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்  தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,தஞ்சாவூர் தேர் திருவிழா அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் ஊர் மக்களால் ஒன்று கூடி நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்ற நிலையில்,களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்த்திருவிழாவும் அல்ல,அது தேரும் அல்ல,மாறாக அது சப்பரம்,இந்த விழா அரசுக்கு தகவல் அளிக்காமல் நடத்தப்பட்டுள்ளது என்ற தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,தேர் விபத்து தொடர்பாக ஏற்பட்ட கிராமத்தின் விஏஓவைபணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்