திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள், காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் டிஐஜி சத்யப்ரியா, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கல்யாண் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமாரும் மாணவி தற்கொலை செய்த தனியார் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…